எப்படி பெண்ணே??



என் முகத்தைப் பார்த்தே
என் உணர்வுகளை
புரிந்து கொள்கையில்
என் தாயானாய்

நான் தவறு
செய்யும் போது
உரிமையுடன் கண்டிக்கையில்
என் தந்தையானாய்

நான் குழம்பும் பொழுது
என்னை வழி நடத்துவதில்
என் ஆசானானாய்

அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்

நான் ஆதரவு தேடும் போது
தோள் கொடுத்து
உதவுகையில்
என் தோழியானாய்

எப்படி பெண்ணே
உன்னுள் மட்டும்
இத்தனை பரிமாணங்கள்
படைத்தான் ஆண்டவன்??

0 Response to "எப்படி பெண்ணே??"

Post a Comment