குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது (2)
(எம்.ஆர்.ராதா)
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் (2)
அரும்பிட முடியாது
(எம்.ஆர்.ராதா)
முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது (2)
(எம்.ஆர்.ராதா)
ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
(எம்.ஆர்.ராதா)
வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது
(குற்றம் )
படம் : ரத்தக் கண்ணீர்
நடித்தவர் : எம். ஆர். ராதா
பாடியவர் : சி.எஸ். ஜெயராமன், எம்.ஆர் ராதா
பாடல் : கு.சா.கிருஷ்ணமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ரத்தக் கண்ணீர்"
Post a Comment