இனிய மகளிர் தின வாழ்த்துகள்...!
பெண்ணொருத்தி
ஆண்மகனாய் அவதாரமெடுக்க
தன்னுயிரை ஈந்து பிறப்பெடுக்கச் செய்து
எனக்கோர் புத்துயிர் கொடுத்தாள்
தாயாய் ஒருத்தி...!
பள்ளிச்சென்ற பால்ய வயதில்
அடித்தும் அரவணைத்தும்
பாடம் புகட்டி வளர்தெடுத்தாள்
ஆசிரியையாய் ஒருத்தி ...!
கல்லூரி காலங்களில் கதைகள் பல பேசி
வகுப்புக்கு உள்ளும் வெளியும்
நட்போடு உடனிருந்தாள்
தோழியாய் ஒருத்தி ...!
வெளியூர் வந்து வேலைசெய்து
பிழைப்பை நடத்திய காலங்களிலும்
உடன்பணி புரிந்து என்னை ஆக்கிரமித்தாள்
காதலியாய் ஒருத்தி ...!
திருமணத்தால் கரம்பிடித்து
வலதுகாலால் என் வாழ்க்கைக்குள் உட்புகுந்து
புதுப்பயணத்தை தொடக்கிவைத்தாள்
மனைவியாய் ஒருத்தி ...!
தந்தையென பதவிஉயர்வு கொடுத்து
என்னை பெருமித படுத்தி
பேரானந்தத்தையும் கொடுத்தாள்
மகளாய் ஒருத்தி...!
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to " "
Post a Comment