மதுரை
மாதங்களின் பெயரிலே
வீதிகள் !
மணக்கும் மல்லிகை
விளையும் !
நாற்புறம் கோபுரம்
சதுரமாய்
அமைந்த நகரம்!
சாலைகள் சன்னதி
நோக்கி செல்லும் !
வை கை
என வரலாறு
சொல்லும் நதி
ஓடும் நகரம் !
புட்டுக்கு மண்சுமந்து
மனிதனுக்கு
பரம்பொருள் ஒன்று
என்று உணர்த்திய
நகரம்!
திருபரங்குன்றம்
பழமூதிர்சோலை என
அறுபடை வீடுகளில்
இரு படை
வீடுகளுடைய நகரம்!
குடும்ப சித்திரம்
அழகர் மலை
கள்ளழகர் வரலாறு
வாழச்செய்யும்
நகரம்!
காந்தி ஆடை
துறந்த நகரம் !
காந்தி அருங்காட்சியகம்
கொண்ட
தூங்கா நகரம் !
மார்கழியில்
பனிப் பொழிவில்
மண்டியிட்டு போடும்
மங்கயரை பார்த்து
கோலம் சொல்லும்
மாதவி பிறந்த ஊர்
கண்ணகி எரித்த ஊர்
நீதி தவறியமைக்காக
பாண்டியன் மறித்த ஊர்
இது என்று !
சங்க தமிழ் வளர்த்த
நகரம் !
நாடக தந்தை
சிலை கொண்ட
நகரம் !
வாரலாறு பல
உண்டு மதுரைக்கு
வந்துபாரும்
கண்டுணர்வாய்!
கண்டுபாரும்
கதைகள் பல
சொல்வாய் !
நன்றி
மதுரை சரவணன் .
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "மதுரை"
Post a Comment