ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
(ஆசைப்பட்ட..)
பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
மண்ணில் ஒரு செடி முளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு பூகம்பம்தான்
சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
(ஆசைப்பட்ட..)
படம்: வியாபாரி
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ஆசைப்பட்ட எல்லாத்தையும்"
Post a Comment