தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!
நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!
தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உறவாட நேரும்
அப்போது..!
அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில்
எங்கேயோ கேட்கும் இனிய ஒலி
உன் வளையலின் ஒலிதானோ என்று
திடுக்கிட்டு எழுவேன்
அப்போது..!
இப்படி சிதறித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை மறக்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுகளை பத்திரப்படுத்திக்கொண்டு...
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "உன் நினைவுகளை. . (Friends)"
Post a Comment