சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
சில்லறைகள் கல்லைரையாகின ,
பணக்கட்டுகள் படிகட்டுகளாகின ,
ஆனால் சந்தோசம் மட்டும் வாரா கடனாயின.
அழுக்கு சட்டைகள் போட கூட
நண்பர்களுக்குள் சண்டை .
அடுக்கு அடுக்கா அழகு சட்டைகள் .
அதை அழுக்காக இல்லாமல் போயினர்
என் நண்பர்கள்.
அப்போது சமோசா
இப்போது பீசா
ஆனால் அதே பசி இல்லை .
பேச அதிகமாக இருந்தது அப்போது .
பேசுவதே அதிகமாக படுகிறது இப்போது .
மலை அளவு தூரம் கூட
மடுவாய் அப்போது .
கடுகளவு தூரத்திற்கே
காரை தேடுகிறது
கண்கள் இப்போது .
அலுவலகத்தில் 1000 பேர் .
ஆனால் வேண்டாத தனிமை மட்டும்
விருந்தாளியாய் என் பக்கத்தில் .
சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
கல்லுரியின் விடுபட்டு போன நாட்கள் கூட
கல்வெட்டுகளாக உள்ளன .
அலுவலகத்தின் அனைத்து நாட்களுமே
விடுபட்டு போயின ஞாபகத்தில் .
கடைசியாக அழுதது ஞாபகத்தில் .
கடைசியாக சிரித்தது ?
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "கல்லூரி - திரும்பி பார்கிறேன்"
Post a Comment