கண்களை மூடினேன் கனவில் வந்தாய் !
கனவுகள் கலைந்தாலும் கண்களில் நின்றாய் !
நிஜத்தில் தேடினேன் நிழலாய் தோன்றினாய் !
உலகில் தேடினேன் என் வாழ்வாய் வந்தாய் !
உயிரில் தேடினேன் என் உயிரே நீதான் என்றாய் !!!
உன் கைபிடித்து
நடக்கத் துவங்கிய
அந்த நாளில் தான்
உணர்ந்தேன்
ஆண் பெண் உறவில்
காதலையும் தாண்டி
நட்பு என்று
ஒன்று உள்ளதென்று.
நீ விரும்பிய இதயத்தை உன்னால் எப்போதும் வெறுக்க முடியாது அது போல அந்த இதயத்தை தவிர வேறு எவராலும் உன்னை அழவைக்க முடியாது . நேசிபது நேசம் என்றால்....
நாம் தேடி தேடி நேசித்த ஒருவரை ஒருநாள் வெறுக்கலாம்.....
ஆனால் நம்மை தேடி தேடி நேசித்தவரை ஒரு நாளும் வெறுக்க முடியாது.......
நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை இழக்க மாட்டேன் உன்னை இழக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்...
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ.....
அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்..........
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "படித்ததில் பிடித்தவை"
Post a Comment