நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!!

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!!

1.வரிசை விதி-
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

2.தொலைபேசி விதி
நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்து விடும்.


3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.

4.தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும்.

5.பொய்க்காரண விதி-
நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.

6.குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.

7.சந்திப்பு விதி-
உங்களுக்கு தெரிந்த ஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு இருக்கும் போது அதிகம்.

8.வெளிப்படுத்துகை விதி-
ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.

9.திரையரங்க விதி-
நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.

10.கோப்பி விதி-
உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.

1 Response to "நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!!"

  1. Pavi says:
    April 10, 2010 at 1:07 AM

    vithikal arumai .

Post a Comment