நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....
நட்புக்கு அது தேவையும் இல்லை...
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே சந்தித்துக்கொண்டோம்....
காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..
நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..
இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...
அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை....
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "நட்புக்கு"
Post a Comment