நேர்மையுடனும், கொண்ட பணியில் செம்மையாக செயல்பட்டு விளங்கி வரும் உழைப்பாளர்கள். அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.
மே தினத்தில் பிறந்து திரையுலகில் தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கி வரும் 'தல' அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றhல் அமராவதியில் தொடங்கி இன்று அசல் வரை வரை 48 படங்களில் திரையுலகில் சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய தன்னுடைய தனித்திறமையை நிருபித்து வருகிறhர்.
பல படங்கள் வெற்றி வாய்ப்புகளை இழந்த போதும் தன்னுடைய தன்னம்பிக்கையின் மூலம் எழுந்து நிற்கிறhர்.
தன்னம்பிக்கை மனிதருக்கு இன்று பிறந்தநாள். நாமும் வாழ்த்துவோம்.
பிறந்த நாள் வாழ்த்துகள் தல...
அஜித் ஒரு இனிய கவிதை -- வளர் கவி வினோத்
அஜித் ---- என்ன வரம் வாங்கி பெற்றாள் உன்னை
உன் தாய்..
என்ன தவம் செய்து வைத்தான் இந்த பெயரை
உன் தகப்பன்…
என்ன யாகம் செய்தேன் நான்…நீ
எனக்கு தலைவன்…
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே…
ஆம், நான் நீயாக மாறிவிட்டேன்…
உன் பெயர் தன்னம்பிக்கை…அதுதான் எனக்கு இரண்டு கை…..
உன் பிரேம புஸ்தகத்தில் அமராவதி பாத்திரமாய்
நுழைந்தாய் எங்களுக்குள்….
ஆசை வார்த்தை பேசி எங்கள் உயிரோடு உயிராக
கலந்து விட்டாய் காதல் மன்னன் ஆக…..
எதிரியின் பாதி பலத்தை எடுத்துக்கொல்லும் வாலியாக
மாறி நீ செய்த அமர்க்களத்தில் உலகமே உன்
முகவரியில் உன்னைத்தேடி…..
நீ வருவாய் என கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வந்தாய் எங்கள் ராஜாவாக…
உன் எதிரிகளுக்கு நீயே வில்லன்…
ஆஞ்சநேய பக்தனாய் நீ செய்த அட்டகாசத்தில்…
புதிய வரலாறு படைத்துவிட்டாய்…
அதனால் இன்று எங்கள் ஆழ்வார் தலயில்
வெற்றி கீரிடம்……..
சாம்பலில் இருந்து உயிர்த்தெழுமாம் பீனிக்ஸ்
பறவை…அதுபோல் நீயும் ஒரு பீனிக்ஸ்
என்றார்கள்…ஆமாம் அதை நிஜமாக்கு..
உன் ஒவ்வொரு தோல்வியிலும் உயிர்த்தெழு..
பீனிக்ஸ் போல் வெற்றி காண்….
சாம்பலுக்காக கவலைப்படாதே… உனக்காக..
ஒன்றல்ல….இரண்டல்ல….ஒராயிரம்..
உடல்கள். தயாராய் இருக்கின்றன..சாம்பலாக…
உன் ரசிகர்கள் என்ற பெயரில்………..
நான் கடவுள் நம்பிக்கை இல்லாத
காட்டுமிராண்டி……ஆனால் உன் விசயத்தில்
எனக்கு இறைவன் இருக்கிறான்…ஏன் என்றால்
எனக்கு தலைவன் இருக்கிறான்…
இனி வரப்போவது ஒவ்வொன்றும் அசத்தல்
ஆட்டம்…அது அசல் ஆட்டம்…
பல்லாண்டு வாழ்க மே தின நாயகனே!!!
----- இப்படிக்கு,
தல அஜீத் ரசிகர்கள்.
சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
சில்லறைகள் கல்லைரையாகின ,
பணக்கட்டுகள் படிகட்டுகளாகின ,
ஆனால் சந்தோசம் மட்டும் வாரா கடனாயின.
அழுக்கு சட்டைகள் போட கூட
நண்பர்களுக்குள் சண்டை .
அடுக்கு அடுக்கா அழகு சட்டைகள் .
அதை அழுக்காக இல்லாமல் போயினர்
என் நண்பர்கள்.
அப்போது சமோசா
இப்போது பீசா
ஆனால் அதே பசி இல்லை .
பேச அதிகமாக இருந்தது அப்போது .
பேசுவதே அதிகமாக படுகிறது இப்போது .
மலை அளவு தூரம் கூட
மடுவாய் அப்போது .
கடுகளவு தூரத்திற்கே
காரை தேடுகிறது
கண்கள் இப்போது .
அலுவலகத்தில் 1000 பேர் .
ஆனால் வேண்டாத தனிமை மட்டும்
விருந்தாளியாய் என் பக்கத்தில் .
சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
கல்லுரியின் விடுபட்டு போன நாட்கள் கூட
கல்வெட்டுகளாக உள்ளன .
அலுவலகத்தின் அனைத்து நாட்களுமே
விடுபட்டு போயின ஞாபகத்தில் .
கடைசியாக அழுதது ஞாபகத்தில் .
கடைசியாக சிரித்தது ?
நட்பு என்பது...
நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.
இத்தகைய நட்பை எனக்கு பெற்றதற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க...
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா....
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா(குறை..)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(கலிநாளு..)
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா..
என்னவென்று விவரிக்க இயலாத
ஏதோ ஒரு கணத்தில் எனக்கும்
உனக்குமான உறவு உருப்பெற்றது..!!
நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!
எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!
வானம் அழுது தீர்த்த
ஒரு மாலை நேரத்தில்..
குடை மறந்த எனக்காய்
நீ நனைந்த நினைவுகளும்..
உன் சந்தோஷமும் துக்கமும்
என்னுடனாய் - பகிர்ந்து
கொண்ட சந்தர்ப்பங்களும்..
உன் அம்மா உன்னை
திட்டிய தினத்தன்று - என்
தோள் சாய்ந்து அழுத பொழுதுகளும்..
என் எல்லாப் பிறந்த நாளுக்கும்
முதல் மனுசியாய் நீ
சொன்ன வாழ்த்துக்களும்..
நான் அழுத போதெல்லாம்
கை படாமல் துடைத்த பாங்கும்..
தோழி..
நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..
நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..
ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!
(இந்தக் கவிதையின் கரு என்னுடையது அல்ல... எப்போதோ படித்த கவிதை ஒன்றின் வரிகள் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. அத்துடன் என்னுடைய வார்த்தைகளையும் கோர்த்து எழுதி இருக்கிறேன்...)
நாம் யார்?
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்
நிஜத்தை
தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்!
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!
கடிதத்தை
பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள்!
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!
ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்
துறந்தவர்கள்!
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!
உழைப்பு என்ற
உள்ளார்ந்த
அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!
கொளுத்தும்
வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும்
தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த
குழந்தைக்கும்
உற்ற
குடும்பத்திற்கும்
உண்மை
நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!
--
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!!
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.
2.தொலைபேசி விதி
நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்து விடும்.
3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.
4.தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும்.
5.பொய்க்காரண விதி-
நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.
6.குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.
7.சந்திப்பு விதி-
உங்களுக்கு தெரிந்த ஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு இருக்கும் போது அதிகம்.
8.வெளிப்படுத்துகை விதி-
ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.
9.திரையரங்க விதி-
நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.
10.கோப்பி விதி-
உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.
Right through our life..we come across so many people in life...we meet... ..we speak ...we hang out with them .......but only a few hit your frequency and get along really really well...and they are called "Friends" ...... and when you get a touch emotionally close...they become your
"Close Friends"
We say:
Friends are for life!!
Friendship is forever!!
Friends are priceless!!
Friendship is above everything!!
etc...etc...
All this is fine...but in reality do you really think friends and friendship is gonna be there for ever? You can keep in touch through phone, mails etc....you can even tell that your friends are always there in your heart n mind.... but u can't express this out!
The society....the constant changes in life...work pressure...wouldn't allow you to do so...... as time flies by people do slowly forget about this...and get on with their respective life.....
Sometimes it makes me feel if itz really worth the pain we go through when we miss someone!
So wat do u say?
Is friendship really worth the pain we go through when we miss someone knowing that they have just carried on with their lives??
Will you be going the same way??
.
.
.
.
.
.
.
When i thought abt this more...i realized that itz worth more than the pain!
Yes....Some day ! Some time !....Some actions would remind you of your closed ones...and it does bring a faint little smile in your hearts.....a inner vibe that takes you through all the wonderful cherishable moments you spent with your close friends in a split second.....
Friendship after all does live through all the difficulties ........deep inside you it exists!!!
It is right there till the end!!!!
This one is dedicated to all my dear and good friends who came across the various phases of my life.....I thank almighty for giving me such loveable ones....and God Bless them all !!!
- Your Friend :)
நட்போடு......நண்பனாகவேயிரு!!!
நட்பை தந்தாய்
அன்பை தந்தாய்
பாசம் காட்டினாய்
பரிவு காட்டினாய்
அறிவுரை அள்ளித்தந்தாய்
வாழ ஊக்கமளித்தாய்
என்
கவிதை கூட உன்னால்தான்..
எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி . . .
தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!
நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!
தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உறவாட நேரும்
அப்போது..!
அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில்
எங்கேயோ கேட்கும் இனிய ஒலி
உன் வளையலின் ஒலிதானோ என்று
திடுக்கிட்டு எழுவேன்
அப்போது..!
இப்படி சிதறித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை மறக்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுகளை பத்திரப்படுத்திக்கொண்டு...
அயல்தேசத்து ஏழை
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !
விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான் துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான் பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்....நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம்! கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு! பழையசடங்குகள் மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில் மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது எங்களின் நீண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின் நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான் ஆறுதல் தருகிறது!
ஆம்... இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;
" இறுதிநாள் " நம்பிக்கையில்தான் இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு... முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை தினாரும் - திர்ஹமும்- ரியாலும் தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?
ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின் வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின் மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம் தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்... பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு! ..............
கண்களை மூடினேன் கனவில் வந்தாய் !
கனவுகள் கலைந்தாலும் கண்களில் நின்றாய் !
நிஜத்தில் தேடினேன் நிழலாய் தோன்றினாய் !
உலகில் தேடினேன் என் வாழ்வாய் வந்தாய் !
உயிரில் தேடினேன் என் உயிரே நீதான் என்றாய் !!!
உன் கைபிடித்து
நடக்கத் துவங்கிய
அந்த நாளில் தான்
உணர்ந்தேன்
ஆண் பெண் உறவில்
காதலையும் தாண்டி
நட்பு என்று
ஒன்று உள்ளதென்று.
நீ விரும்பிய இதயத்தை உன்னால் எப்போதும் வெறுக்க முடியாது அது போல அந்த இதயத்தை தவிர வேறு எவராலும் உன்னை அழவைக்க முடியாது . நேசிபது நேசம் என்றால்....
நாம் தேடி தேடி நேசித்த ஒருவரை ஒருநாள் வெறுக்கலாம்.....
ஆனால் நம்மை தேடி தேடி நேசித்தவரை ஒரு நாளும் வெறுக்க முடியாது.......
நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை இழக்க மாட்டேன் உன்னை இழக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்...
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ.....
அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்..........
நான்
சிந்தித்த
வேளையெல்ன்ம் சந்தித்தேன் .
அன்று
என் Thozhi நீ !
ஆனால் !
நான்
சந்திக்கும்
வேளையெல்லாம் சிந்திக்கிறேன் .
இன்று
என் Kathali நீ!
இரவெல்லாம் கண்விழித்து
நான் எத்தனை
கவிதைகள் எழுதினாலும்
அத்தனை கவிதைகளும்
தோற்றுப்போகின்றன
நீ சொல்லும்
"சீ போ"
எனும் வார்த்தைக்கு முன்னால்...
உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன், தவறுகள் செய்தால் தண்டித்து விடு..., ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே
உன் நட்பும் ஒரு அடிமைத்தனம் தான் தயவு செய்து சுதந்திர பிரகடனம் மட்டும் அறிவித்து விடாதே......
சிற்பி எழுப்பிய சிற்பம்........!
கலைஞனுக்கு சொந்தமாகலாம்........!
ஓவியன் வரைந்த ஓவியம்........!
வாங்குபவனுக்கு சொந்தமாகலாம்........!
கவிஞன் எழுதிய கவிதை........!
ரசிபவனுக்கு சொந்தமாகலாம்........!
நான் விரும்பிய இதயம்........!
எனக்கு மட்டும் தான் சொந்தம்.......!
அவளுக்கு அல்ல !
அம்மா
எனக்கு பிறந்த நாள் என்று வாழ்த்துக்கள் வந்தன.........!
பாவம் அவர்களுக்கு தெரியாது.....!
அந்நாள் உனக்கு தான் மறுபிறவி எடுத்த நாள் என்று ........!
இனிய மறு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.........!
மன்னவா
நீ என்னை விரும்பவேண்டம்
நான் உன்னை விரும்புவதை வெறுக்காதே ,
நீ என்னை கண்கொண்டு பார்க்கவேண்டாம்
உன் கண்ணை ரசிக்க விடு ,
நீ என் அருகில் அமர வேண்டம்
உன் நிழலில் தொட்டு கொள்ளவிடு,
நீ என் கணவனாக வேண்டம்
நான் உன் இமைகளாக விடு,
நீ என் இதையமாக இருக்கிறாய்
என்று நான் உன் இதயமாக மாறும் வரை,
காத்து கொண்டிருபேன்
என்னவனுக்கு
சிந்தித்த சில தருணங்களில் நீ.........,
என் கிருகல்களில் அனைதுவரியும் நீ ..........,
என் கண்ணிரில் ஒவ்வொரு துளியும் நீ .......,
ஆனால்
நீ ரசித்து சென்றது என்னவோ உன் கடமை பணியை........,
நான் உன் பின் ரசித்து வந்தது உன் காலடி தடத்தை.......,
என்றாவது திரும்பி பார் உன் நினைவுகளோடு நின்ருகொண்டிருபேன் .........!
தோல்வி உன்னைத் தோற்க்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்க்கடித்து விடு" - விவேகனந்தர்
[maroon][b]உலகத்தில் உறவுகள் இறுதி வரை வருமா? என்று தெரியாது! ஆனால் "நட்பு" இந்த உலகின் ஓசை கேட்க்கும் வரை வரும் இதுவே நட்பு.[/b][/maroon]
காயம் பட்டவனுக்கு அது ஆரும் வரை தான் வலி ஆனால்
காயப்படுத்தினவனுக்கு ஆயுள் முழுவதும் வலி....
*********************************
விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...
இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...
என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............
உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உன்டு.....
உன் நட்புக்காக இதயம்...
கொடுக்க நர்ன் மட்டும் உன்டு.......
**சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்**
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது!!!!
என் கல்லறை வரும் வழியெங்கும்
முட்களை தூவுங்கள்....
ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு
என் காதல் உயிர்த்தெழலாம்
எனக்கு விருப்பமில்லை
மீண்டும் இறந்துவிட...
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....
ராமர், அல்லா, இயேசு பெயர்கள் கூட மூன்றெழுத்து
நாமம், குல்லா, சிலுவை சின்னங்கள் கூட மூன்றெழுத்து
கோவில், மசூதி, சர்ச் இடங்கள் கூட மூன்றெழுத்து
பின் எதுக்கு
சண்டை, குண்டு, அழிவு என்ற மூன்றெழுத்து வேண்டாம்
அன்பு, அமைதி, உதவி என்ற மூன்றெழுத்து கொண்டு
தேசத்தை காப்போம்
~~~~~~~~~~~~~~~~~~~~~
நட்பு
சிறகுகள் கிடைத்தவுடன்
பறப்பதல்ல நட்பு . . .
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதே நட்பு . . .
~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்
என் மனதை உருக்கிய பாடல்
உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
அன்பே உயிராய்த் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உனைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நானிங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இது தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர்க் காதலில்
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இது தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர்க் காதலில்
(உயிரைத் தொலைத்தேன் அது)
ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ...
இன்று நீ என்னை விட்டு பிரிந்தாலும்! என்றாவது நீ என்னை ஓரு நிமிடம் நினைக்கும் போது... நான் உன் கண்களில் இருப்பேன்.. கண்ணீராக!!
கடற்கரை மணலில் தனிமையில் நடந்தேன்
நீ என்னகு வழித்துணையாக வந்தாய்
என் இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன்
நிமிடங்கள் நீண்டன நாட்கள் ஓடின
இன்றும் அதே கடற்கரை மணலில நடக்கிறேன்
இன்றும் வழித்துணையாக நீ வருகிறாய்
ஆனால் நேற்று வரை கடலின் ஆழத்தை மட்டுமே உணர்ந்த நான்
இன்று நட்பின் ஆழத்தையும் உணர்கிறேன்
என் வாழ்வின் இறுதி நொடி வரை உன்னுடன் இருப்பேன்
உன் அன்பு
நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....
நட்புக்கு அது தேவையும் இல்லை...
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே சந்தித்துக்கொண்டோம்....
காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..
நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..
இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...
அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை....
என் உள்ளம் கவர்ந்துசென்ற
உருவமில்லா ஸ்னேகிதியே!
எங்கே நீ போய்விட்டாய்
ஏன் என்னை அழவிட்டாய்?
திங்கள் தொடங்கி இங்கு
தினம் ஏழும்
காத்திருந்தேன்
எங்கேயோ இருந்துகொண்டு
என்னைச்
சிறைப்பிடித்தாய்...
காலை எழுந்தவுடன்
காப்பியில்லை டீயில்லை
கணினியே கதியென்று
காத்திருக்க
வைத்துவிட்டாய்...
இ மெயிலில்
எழுப்பிவிட்டாய்
வாய்ஸ் மெயிலில்
சிரிக்கவைத்தாய்
வாழ்த்துக்கள் அனுப்பி
என்னை
வானத்தில் பறக்கவைத்தாய்
முகத்தை மட்டும் ஏன்
மறைத்தென்னை சோதித்தாய்?
உன்னோடிருந்த
இனியபொழுதுகளில்
எல்லாத் தளங்களும்
நமக்கென்று நேசித்தேன்
இரவும் பகலுமெல்லாம்
அவற்றையே சுவாசித்தேன்...
இன்று,
நீயில்லாத் தனிமையில்
அத்தனை தளங்களும்
போர்க்களமாய்த்
தெரியுதடி...
ஊரின் பெயர் சிறப்பு
ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன
திருப்பதி-லட்டு
பழனி-பஞ்சாமிர்தம்
திருநெல்வேலி-அல்வா
பண்ருட்டி-பலாப்பழம்
மணப்பாறை-முறுக்கு
சேலம்-மாம்பழம்
திண்டுக்கல்-பூட்டு
திருப்பூர்-பனியன்
மதுரை-குண்டு மல்லி
சிவகாசி-பட்டாசு
நாமக்கல்-முட்டை
தஞ்சாவூர்-தட்டு
பேரையூர்-பருப்பு சாதம்
நமணசமுத்திரம்-வெள்ளரிக்காய்
பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்
மன்னார்குடி - மதில்
திருவாரூர் - தேர்
கும்பகோணம்- கோவில், வெற்றிலை
திருச்சி- மலைக்கோட்டை
மதுரை-மல்லி
மேட்டூர்- அணைகட்டு
சேலம்-இரும்பு
கோவை-பஞ்சு
திருவிடைமருதூர்-தெரு
காஞ்சிபுரம்- பட்டு
குற்றாலம்-அருவி
கொல்லிமலை-தேன்
கோட்டக்கல்-ஆயுர்வேதம்
சிதம்பரம்-ரகசியம்
நீலகிரி- தேயிலை
ராஜபாளையம்-நாய்.
முதுமலை-யானை
பத்தமடை-பாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு
திருவண்ணாமலை - தீபம்
வளையப்பட்டி - தவில்
திருச்செந்தூர் - வேல்
கன்னியாகுமரி - வள்ளுவர் சிலை
ஒக்கேனேக்கல் -நீர்வீழ்ச்சி
இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்
கரூர்-கோரைப்பாய்
ஊத்துக்குளி-வெண்ணெய்.
சென்னிமலை-பெட்சீட்.
குமாரபாளையம்-லுங்கி.
சிவகாசி-லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி
ஈரோடு - மஞ்சள்.
மார்கழி மாதமொன்றின் அதிகாலையில தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்.
தேவதைகளின் நிறம் கறுப்பென்று வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்.
அனிச்சமலர் மனசுக்குள் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்.
மின்னஞ்சல் பெட்டியை முத்தங்களால் நிரப்பி சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்.
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றுதின்ற பிஞ்சுமன வஞ்சியவள்.
பூங்குயில் குரலால் இறைபாடல் பாடுகின்ற குழந்தைமன பெண்ணவள்.
என் இதயசிம்மாசனத்தில் நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும் சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்.
இதயத்தில் துவங்கிய காதல் கண்களின் சந்திப்பைக்காண ஏழுமாதம் தவமிருந்தவள்.
முதல் சந்திப்பில் மொழி மறந்து பேச தவித்த பொழுதில் கண்சிமிட்டாமல் சிலையானவள்.
கனவுகளுடன் திரிந்தபோது என் கனவுகளை தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்.
சொல்லித் தெரிவதில்லை காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்.
அவளை அறிமுகப்படுத்திய நண்பனே எட்டப்பனாக மாறியதில் துடிதுடித்தவள்.
கவர்ந்து சென்று வாழ பொருள்தேடி தலைநகரம்
நான் பயணித்த காலத்தில் கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்.
என் கையெழுத்தும் கவிதை என்று கடிதமெழுதிய அவள் பேனாவின் மைத்துளிக்குள் தன் காதலைச் சுமந்தவள்.
வேலைகிடைத்த செய்தியை சொல்வதற்கு தொலைபேசியில் அழைத்தபோது அழுதுகொண்டே வாழ்த்தியவள்.
அழுகையின் காரணமறியாமல் ஆனந்த கண்ணீரென்று நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில் தொலைபேசியில் அழைத்தவள்.
நீண்ட மெளனம் உடைத்து திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை செவிக்குள் சொல்லியழுதவள்.
தவித்து,துடித்து,துவண்டு,அழுது,அடங்கி,வதங்கிய பூவாக மணமேடை ஏறியவள்.
சிறகுகளை இழந்துவிட்டு சிலுவைகளை சுமந்துகொண்டு மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்.
வானத்தை இழந்துவிட்ட நிலவு இன்று எங்கோ ஒரு கானத்தில் காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது.
பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி தொலைந்த காதல் இன்று சட்டைப்பையிலிருந்து வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்
அவள் நினைவுகளின் கனத்தை சுமந்துகொண்டு தள்ளாடியபடி பயணிக்கிறது.