பிறந்த நாள் வாழ்த்துகள் தல...



நேர்மையுடனும், கொண்ட பணியில் செம்மையாக செயல்பட்டு விளங்கி வரும் உழைப்பாளர்கள். அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.

மே தினத்தில் பிறந்து திரையுலகில் தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கி வரும் 'தல' அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றhல் அமராவதியில் தொடங்கி இன்று அசல் வரை வரை 48 படங்களில் திரையுலகில் சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய தன்னுடைய தனித்திறமையை நிருபித்து வருகிறhர்.


பல படங்கள் வெற்றி வாய்ப்புகளை இழந்த போதும் தன்னுடைய தன்னம்பிக்கையின் மூலம் எழுந்து நிற்கிறhர்.



தன்னம்பிக்கை மனிதருக்கு இன்று பிறந்தநாள். நாமும் வாழ்த்துவோம்.


பிறந்த நாள் வாழ்த்துகள் தல...


அஜித் ஒரு இனிய கவிதை -- வளர் கவி வினோத்


அஜித் ---- என்ன வரம் வாங்கி பெற்றாள் உன்னை
உன் தாய்..
என்ன தவம் செய்து வைத்தான் இந்த பெயரை
உன் தகப்பன்…
என்ன யாகம் செய்தேன் நான்…நீ
எனக்கு தலைவன்…


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே…
ஆம், நான் நீயாக மாறிவிட்டேன்…
உன் பெயர் தன்னம்பிக்கை…அதுதான் எனக்கு இரண்டு கை…..
உன் பிரேம புஸ்தகத்தில் அமராவதி பாத்திரமாய்
நுழைந்தாய் எங்களுக்குள்….


ஆசை வார்த்தை பேசி எங்கள் உயிரோடு உயிராக
கலந்து விட்டாய் காதல் மன்னன் ஆக…..
எதிரியின் பாதி பலத்தை எடுத்துக்கொல்லும் வாலியாக
மாறி நீ செய்த அமர்க்களத்தில் உலகமே உன்
முகவரியில் உன்னைத்தேடி…..


நீ வருவாய் என கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வந்தாய் எங்கள் ராஜாவாக…
உன் எதிரிகளுக்கு நீயே வில்லன்…
ஆஞ்சநேய பக்தனாய் நீ செய்த அட்டகாசத்தில்…
புதிய வரலாறு படைத்துவிட்டாய்…
அதனால் இன்று எங்கள் ஆழ்வார் தலயில்
வெற்றி கீரிடம்……..


சாம்பலில் இருந்து உயிர்த்தெழுமாம் பீனிக்ஸ்
பறவை…அதுபோல் நீயும் ஒரு பீனிக்ஸ்
என்றார்கள்…ஆமாம் அதை நிஜமாக்கு..
உன் ஒவ்வொரு தோல்வியிலும் உயிர்த்தெழு..
பீனிக்ஸ் போல் வெற்றி காண்….


சாம்பலுக்காக கவலைப்படாதே… உனக்காக..
ஒன்றல்ல….இரண்டல்ல….ஒராயிரம்..
உடல்கள். தயாராய் இருக்கின்றன..சாம்பலாக…
உன் ரசிகர்கள் என்ற பெயரில்………..


நான் கடவுள் நம்பிக்கை இல்லாத
காட்டுமிராண்டி……ஆனால் உன் விசயத்தில்
எனக்கு இறைவன் இருக்கிறான்…ஏன் என்றால்
எனக்கு தலைவன் இருக்கிறான்…


இனி வரப்போவது ஒவ்வொன்றும் அசத்தல்
ஆட்டம்…அது அசல் ஆட்டம்…

பல்லாண்டு வாழ்க மே தின நாயகனே!!!

----- இப்படிக்கு,


தல அஜீத் ரசிகர்கள்.

கல்லூரி - திரும்பி பார்கிறேன்

சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .

சில்லறைகள் கல்லைரையாகின ,
பணக்கட்டுகள் படிகட்டுகளாகின ,
ஆனால் சந்தோசம் மட்டும் வாரா கடனாயின.

அழுக்கு சட்டைகள் போட கூட
நண்பர்களுக்குள் சண்டை .
அடுக்கு அடுக்கா அழகு சட்டைகள் .
அதை அழுக்காக இல்லாமல் போயினர்
என் நண்பர்கள்.

அப்போது சமோசா
இப்போது பீசா
ஆனால் அதே பசி இல்லை .

பேச அதிகமாக இருந்தது அப்போது .
பேசுவதே அதிகமாக படுகிறது இப்போது .

மலை அளவு தூரம் கூட
மடுவாய் அப்போது .
கடுகளவு தூரத்திற்கே
காரை தேடுகிறது
கண்கள் இப்போது .

அலுவலகத்தில் 1000 பேர் .
ஆனால் வேண்டாத தனிமை மட்டும்
விருந்தாளியாய் என் பக்கத்தில் .

சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .

கல்லுரியின் விடுபட்டு போன நாட்கள் கூட
கல்வெட்டுகளாக உள்ளன .
அலுவலகத்தின் அனைத்து நாட்களுமே
விடுபட்டு போயின ஞாபகத்தில் .

கடைசியாக அழுதது ஞாபகத்தில் .
கடைசியாக சிரித்தது ?

நட்பு என்பது...

நட்பு என்பது...

நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.

நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது

நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது

நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது

நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.

நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது

நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது

நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது

நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது

நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.

இத்தகைய நட்பை எனக்கு பெற்றதற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க...

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா....
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா(குறை..)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(கலிநாளு..)

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா..

பிரியமான தோழிக்கு...!!!




என்னவென்று விவரிக்க இயலாத
ஏதோ ஒரு கணத்தில் எனக்கும்
உனக்குமான உறவு உருப்பெற்றது..!!


நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!


எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!


வானம் அழுது தீர்த்த
ஒரு மாலை நேரத்தில்..
குடை மறந்த எனக்காய்
நீ நனைந்த நினைவுகளும்..


உன் சந்தோஷமும் துக்கமும்
என்னுடனாய் - பகிர்ந்து
கொண்ட சந்தர்ப்பங்களும்..


உன் அம்மா உன்னை
திட்டிய தினத்தன்று - என்
தோள் சாய்ந்து அழுத பொழுதுகளும்..


என் எல்லாப் பிறந்த நாளுக்கும்
முதல் மனுசியாய் நீ
சொன்ன வாழ்த்துக்களும்..


நான் அழுத போதெல்லாம்
கை படாமல் துடைத்த பாங்கும்..


தோழி..


நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..


நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..


ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!


(இந்தக் கவிதையின் கரு என்னுடையது அல்ல... எப்போதோ படித்த கவிதை ஒன்றின் வரிகள் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. அத்துடன் என்னுடைய வார்த்தைகளையும் கோர்த்து எழுதி இருக்கிறேன்...)

வளைகுடா தமிழன்

நாம் யார்?



வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!

வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்

நிஜத்தை
தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்!

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!

கடிதத்தை
பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்

மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!


நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள்!

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!


ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்
துறந்தவர்கள்!

வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து

கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!

தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!

அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!

உழைப்பு என்ற
உள்ளார்ந்த
அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு

முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!

கொளுத்தும்
வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும்
தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!

பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த
குழந்தைக்கும்
உற்ற
குடும்பத்திற்கும்

உண்மை
நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!


--

IPL20-20 கலாட்டா