என் நாட்களின்
நிகழ்ச்சிகள் அனைத்தையும்
உன்னிடம் ஆவலுடன்
பகிர்ந்து கொள்கிறேன்
என் கடிகார முட்கள்
நகரும் ஒவ்வொரு நொடியும்
உன்னை பற்றியே சிந்திக்கிறேன்
இது உன்மேல்
எனக்கு இருக்கும்
காதலா அல்லது
வெறும் ஈர்ப்பா?
முதன் முதலில் பழகும்
ஆண் தோழனிடம்
ஈர்ப்பு ஏற்படுமாம்
கேள்விபட்டிருக்கிறேன்
ஆனால் நீ என்
முதல் ஆண் தோழன்
அல்லவே..
உனக்கு முன்னால்
அறிமுகமாகிய நண்பர்களிடம்
ஏற்படாத ஈர்ப்பு
உன்னிடம் மட்டும் ஏன்?
நான் எப்பொழுது
எதை பற்றி பேசினாலும்
என் மனநிலைக்கேற்றவாறே
பதில் சொல்ல
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது?
ஒருவேளை
நீ சொல்லும்
பதிலுக்கேற்றவாறு
என் மனநிலைதான்
மாறிவிடுகிறதோ?
நீ மற்ற பெண்களை பற்றி
என்னிடம் பேசும்பொழுது
எனக்கு பொறாமையே
தோன்றுவதில்லையே.. ஏன்?
உன் சந்தோஷம் மட்டுமே
முக்கியம் என்று எண்ணுவதாலா?
அல்லது உன் மனதில்
எனக்கான இடத்தை
வேறு யாரும் பறித்துவிடமுடியாது
என்ற நம்பிக்கையாலா?
சில சமயங்களில்
நீ உரிமையுடன் பேசும்பொழுது
சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும்
மனதை மறைத்து
வேறு பேச்சிற்கு திசைமாற்றிவிட்டு
உன்னிடம் பேசி முடித்தபின்
நீ வெறும் தோழியாய்
நினைத்தே உரிமைகொண்டாடியிருக்கலாம்
என்று என் மனம்
என்னை கேலி செய்வதேன்?
ஒருவேளை இது வெறும்
ஈர்ப்பாய் இல்லாமல்
காதலாய் இருந்தால்
அதை உன் முகம்
பார்த்து சொல்லும்
துணிச்சல் எனக்கு உள்ளதா?
அப்படி சொல்லி
நீ மறுத்துவிட்டால்
அதை ஏற்கும்
வலிமை தான்
என் இதயத்திற்கு உள்ளதா?
சரி. ஏன் இந்த அவஸ்தை?
உன்னை பற்றி நினைப்பதையே
தவிர்ப்போம் என்று நினைத்தாலும்
அப்போது தான் சம்மணம் போட்டு
இன்னும் வலுவாய் என் இதயத்தில் அமருகிறாய்
என்ன செய்வேன் நான்?
நன்றி :3G
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "உளறுதல் என் உள்ளத்தின் வேலை"
Post a Comment